×
Saravana Stores

பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழ்நாட்டில் மின்சாரம் பாதிப்பு ஏதும் இல்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: பெஞ்சல் புயலை எதிர்கொள்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 24*7 செயல்பட்டு வரும் பொது மக்களுக்கான மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் மின்சார பாதிப்பு ஏதும் இல்லை.

புயல் கரையினை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிக கனமழையுடன் பலத்த காற்று 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அவ்வாறான பலத்த காற்று வீசும் நேரங்களில் மட்டும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி மின்னூட்டிகளை கை நிறுத்தம் செய்யப்படும்.

சென் னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் செயற்பொறியாளர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சுமார் 10,000 பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் தயார் நிலையில் உள்ளனர். மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், ஜே.சி.பி., கிரேன்கள் உள்ளிட்ட வாகங்கள் மற்றும் அனைத்து தளவாடப் பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

மின் தடங்கல் ஏதேனும் ஏற்படின் முதற்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்க வேண்டும். மின்னகத்தை 94987 94987 தொடர்பு கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

The post பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழ்நாட்டில் மின்சாரம் பாதிப்பு ஏதும் இல்லை: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU ,MINISTER ,SENTILPALAJI ,Chennai ,Electricity Sector ,Electricity Board Head Office ,Tamil Nadu Electricity Board ,Bengal ,
× RELATED பெஞ்சல் புயல்: மின் நுகர்வோர்...