சென்னை: மதிமுக முதன்மை செயலாளர் துரை ைவகோ, கடந்த சில ஆண்டுகளாக அத்தியாவசிய மருந்துகளின் விலையேற்றத்தால் சாதாரண எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, மீண்டும் அக்டோபர் 24ம் தேதி சில அத்தியாவசிய மருந்துகளுக்கு விலையேற்றம் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு, அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார். அதன்படி கடந்த 24ம் தேதி அத்தியாவசிய மருந்துகள் விலை ஏற்றத்தை அனுமதிக்கும் முன், மருந்துகள் தயாரிப்பு சாத்தியமற்றதாக மாறிவிட்டது என்ற மருந்து உற்பத்தியாளர்களின் கூற்றை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் சரியான முறையில் விசாரித்ததா? விசாரித்திருந்தால், அதன் விவரங்களை தெரிவிக்கவும். விசாரிக்கவில்லை என்றால், அதற்கான காரணங்களையும் தெரிவிக்கவும் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் அளித்த பதில்: மருந்து உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் ஒருங்கிணைந்த அமைச்சக குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டது. இதில் மத்திய மருந்து தர நிலைகள் கட்டுப்பாட்டு அமைப்பு, இயக்குநர் பொது சுகாதாரத்துறை மற்றும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது, குறிப்பிட்ட மருந்துகளின் அத்தியாவசியம், அந்த மருந்துகள் எப்போதிலிருந்து விலை கட்டிப்பாட்டில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஏபிஐ விலைகளின் மாற்றம் என்ன, உற்பத்தியாளர்களிடமிருந்து அந்த மருந்துகள் நிறுத்தப்பட்டால் ஏற்படும் தட்டுப்பாடு ஆகிய அளவீடுகளில் பரிசீலனை செய்யப்பட்டு, விலை ஏற்றத்திற்காக அனுமதி கோரப்பட்ட 77 வகைகளில், 8 மருந்துகளின் 11 வகைகளுக்கு மட்டுமே விலை உயர்வுக்கான அனுமதி அளிக்கப்பட்டது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அத்தியாவசிய மருந்துகளுக்கு விலையேற்றம் அனுமதி; தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் சரியாக விசாரித்ததா?… துரை வைகோ எம்.பி கேள்வி appeared first on Dinakaran.