திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினர்கள்

திருவாரூர், நவ. 28: திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளவர்கள் உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் உறுப்பினர்களாக பதிவு பெற்றவர்களின் மகன், மகள் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், தொழிற்கல்வி படிப்புகள், பட்டயப்படிப்புகள் படித்தால் கல்வி உதவித்தொகையும், மேலும், திருமண உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகையும், காசநோய், புற்றுநோய், எய்ட்ஸ், டையாலிசிஸ் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, திருவாரூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினர்களாக பதிவு பெற்றவர்கள் மேற்படி உதவித்தொகை பெற தங்கள் பகுதிக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் அல்லது வட்ட அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியரிடம் அசல் ஆவணங்களுடன் மனுவினை அளித்து பயன் பெறலாம். இவ்வாறு, கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் ெதாடங்கிய மழை இரவு பகலாக நேற்று மாலை வரை அடைமழையாக பெய்ததால், 2வது நாளாக நேற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

The post திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினர்கள் appeared first on Dinakaran.

Related Stories: