கொல்லங்கோடு அருகே ஆவணங்கள் இன்றி கருங்கல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

பாலக்காடு, நவ.21: பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழகத்தில் இருந்து கோவிந்தாபுரம் சோதனைச்சாவடி வழியாக கேரளாவிற்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லாமல் கருங்கல் லோடு ஏற்றிய 8 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். இதனை போலீசார் தடுத்து டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி கருங்கல் லோடு தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தல் நடப்பது தெரியவந்தது. இவர்கள் தமிழக குவாரிகளில் இருந்து கருங்கல் மற்றும் எம்.சான்ட் போன்ற கட்டுமான பொருட்கள் இரவு நேரங்களில் கடத்தியுள்ளனர். இதையடுத்து கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிந்து புவியியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

The post கொல்லங்கோடு அருகே ஆவணங்கள் இன்றி கருங்கல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: