குன்னூர் அரசு மருத்துவமனையில் புதிதாக ரூ.15 லட்சத்தில் எக்ஸ்ரே கருவியை பயன்பாட்டுக்கு கலெக்டர் துவக்கி வைத்தார்

குன்னூர், நவ.15: குன்னூர் அரசு மருத்துவமனையில் புதிதாக 15 லட்சம் மதிப்பில் எக்ஸ்ரே கருவியை நோயாளிகளின் பயன்பாட்டிற்காக கலெக்டர் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அரசு மருத்துவமனையில் நகர பகுதி மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு கிராமப்புற பகுதிகளில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நாள்தோறும் உட்பிரிவு நோயாளிகள் மற்றும் வெளி பிரிவு நோயாளிகள் என ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு நாள்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாகவே எக்ஸ்ரே கருவி செயல்பாடு இல்லாததால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரும் சிரமமடைந்து வந்தனர். இதன் காரணமாக நோயாளிகளை உதகை அரசு மருத்துவ கல்லூரிக்கும், கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்டு தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எக்ஸ்ரே கருவி மற்றும் அதன் உபகரணங்களை மருத்துவமனைக்கு வழங்கினர். இதனை நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின் இதனை மருத்துவமனை வளாகம் தூய்மையான முறையில் உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கலெக்டர் கூறியதாவது: நீலகிரி மாவட்டம், குன்னூர் அரசு மருத்துவமனையில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நுண்கதிர் பிரிவு மற்றும் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட பணிகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. உள்நோயாளிகளின் பிரிவும் விரைவில் சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோல, சுற்றுச்சுவர் அமைப்பது மற்றும் வளாகத்திலுள்ள கழிவுநீர் வடிகால் சீர்செய்வது தொடர்பான பணிகள் குறித்து, பொதுப்பணித்துறை மற்றும் குன்னூர் நகராட்சிப் பொறியாளர்கள் இணைந்து கள ஆய்வு செய்து, பின்னர் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், மாவட்டத்தில் பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளுக்கு மட்டும் ஏறக்குறைய 200 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பெய்த மழை பாதிப்புகளுக்கு இழப்பீட்டு தொகைகளும் வழங்கப்பட்டுள்ளது. குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் 21 குழுக்கள் களத்தில் உள்ளனர். மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ள 1077 என்னும் தொலைபேசி எண் மற்றும் வட்ட அளவில் வழங்கப்பட்டுள்ள தொலைப்பேசி எண்களிலும் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையை கண்டு, யாரும் பயப்பட வேண்டாம். மேலும் அரசு மருத்துவமனையில் இன்று திறந்து வைக்கப்பட்ட எக்ஸ்ரே கருவிக்கான டெக்னீசியன் மற்றும் மருத்துவர்கள் இருப்பதால் மேற்கொண்டு நோயாளிகள் உதகை, கோவை போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டியதில்லை. இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்த அப்போது, குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் நாக புஷ்பராணி, தலைமை மருத்துவர் ரமேஷ், தன்னார்வலர்கள் ஜான், சார்லஸ் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post குன்னூர் அரசு மருத்துவமனையில் புதிதாக ரூ.15 லட்சத்தில் எக்ஸ்ரே கருவியை பயன்பாட்டுக்கு கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: