கூடலூர், நவ.20: நீலகிரி மாவட்டம், தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பேபி நகர் மற்றும் செம்பகொல்லி கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள், கிராமத்துக்கு வரும் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வச்சிக்கொல்லி பகுதியில் இருந்து பேபி நகர் செல்லும் இந்த சாலை சுமார் 1 கிலோ மீட்டர் குறைவான தூரமே உள்ளது. இங்குள்ள செம்பக்கொல்லி மற்றும் பேபி நகர் பழங்குடியின மக்கள் மற்றும் அருகில் வசிக்கும் பிற இன மக்கள் பல்வேறு முக்கிய தேவைகளுக்கு இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் போஸ்பாரா பகுதியில் உள்ள நியாயவிலை கடை மற்றும் அருகில் உள்ள பகுதியில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றுக்கும் பகுதி மக்கள் செல்வதற்கு இந்த சாலையில் பிரதானமாக உள்ளது. இந்த சாலை கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ், ஆட்டோ, ஜீப் போன்ற வாகனங்கள் கிராமத்திற்கு வர முடியாத நிலை உள்ளதாகவும், கடந்த வருடம் இப்பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்து சாலையை சீரமைத்து தர உறுதி அளித்ததாகவும், விரைவில் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளா விட்டால் போராட்டம் நடத்த போவதாக கிராம மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post செம்பகொல்லி கிராம சாலையை சீரமைக்க பழங்குடியின மக்கள் போராட முடிவு appeared first on Dinakaran.