ஊட்டி,நவ.19: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கிடங்கினை நீலகிரி மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கு உள்ளது. இங்கு, பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களுக்கும் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாகப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கினை அவ்வப்போது அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நீலகிரி கலெக்டர் மற்றும் தேர்தல் அலுவலர் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திர கிடங்களில் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறைகளாக பிரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதனை தொடர்ந்து, கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆய்வின் போது, வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் (ஊட்டி) சதீஷ், ஊட்டி தாசில்தார் சரவணகுமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரிதிநிதிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.
The post மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கினை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.