சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்: அரசு ஊழியர் சங்க ஊட்டி வட்ட மாநாட்டில் திர்மானம்

 

ஊட்டி, நவ.16: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஊட்டி வட்ட 15வது மாநாடு ஊட்டியில் நடந்தது. இதில் ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்களை கொண்டு செயல்படுத்திட வேண்டும்.

சுகாதாரத்துறையில் எம்ஆர்பி செவிலியர்களை காலமுறை ஊதியத்தில் பணிவரன்முறை செய்திட வேண்டும். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.  சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தினை பணிக்காலமாக வரன்முறைபடுத்திட நீதிமன்றம் வழங்கிய உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும்.

அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் ஊழியர்களை நியமித்திட வேண்டும். தோட்டக்கலை பண்ணை ஊழியர்களை காலவரன்முறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் 21 மாதகால ஊதிய நிலுவை தொகையினை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் ராஜேந்திரன், செல்வி, சிவபெருமாள் மற்றும் ஊட்டி வட்ட கிளையை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர். முடிவில் குணசேகரன் நன்றி கூறினார்.

The post சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்: அரசு ஊழியர் சங்க ஊட்டி வட்ட மாநாட்டில் திர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: