சேலம் மாநகர் மாவட்ட நாதக செயலாளர் விலகல்: சீமான் செயல்பாடு சரியில்லை என குற்றச்சாட்டு

சேலம்: நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்டசெயலாளர் கட்சியிலிருந்து விலகி உள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சர்வாதிகாரிபோல செயல்படுவதும், யாரையும் பேச அனுமதிக்காமல் இஷ்டமிருந்தால் இரு, இல்லையென்றால் ஓடு என்று கூறுவதாலும், பல மாவட்ட நிர்வாகிகள் அக்கட்சியை விட்டு விலகி வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை, அக்கட்சியை விட்டு விலகுவதாக தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், நாம் தமிழர் கட்சியின் மாநகர் மாவட்டசெயலாளர் என்ற பொறுப்பில் இருந்தும், கட்சியிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

இதுநாள் வரை என்னோடு உடனிருந்து ஒத்துழைப்பு கொடுத்த தோழமைகள் அனைவருக்கும் என் நன்றி’ என தெரிவித்துள்ளார். இதுகுறித்து தங்கதுரை கூறுகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடு சரியில்லாத காரணத்தினாலும், எங்களின் கருத்துக்களை அவர் கேட்காததாலும், அவரை சுற்றியுள்ள 4 பேர் சொல்வதை மட்டும் கேட்டு செயல்பட்டு வருவதாலும் அதிருப்தி அடைந்து கட்சியில் இருந்து விலகி விட்டேன் என்றார். சேலம் அழகாபுரத்தை சேர்ந்த தங்கதுரை, நாதகவில் 5 ஆண்டுகளாக மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

The post சேலம் மாநகர் மாவட்ட நாதக செயலாளர் விலகல்: சீமான் செயல்பாடு சரியில்லை என குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: