அதன்படி, பிரதி திங்கட்கிழமை தோறும் நடக்கும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. கூட்டத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 315 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அந்த வகையில், நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை சார்பில், ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தி கொண்டிருக்கும் சிறந்த சுற்றுச்சூழல் களப்பணியாற்றிய மாணவ – மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளுடன் இணைந்து செயலாற்றிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post காஞ்சியில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி ’ திட்டத்தின் கீழ் சிறந்த சுற்றுச்சூழல் களப்பணியாற்றிய மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.