ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான அஸ்வத்தாமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து தாய் மனு: தமிழ்நாடு அரசு, சென்னை காவல் ஆணையர் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த அஸ்வத்தாமனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து கடந்த செப்டம்பர் 19ம் தேதி சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அஸ்வத்தாமனின் தாய் விசாலாட்சி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார். அதில், பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஸ்வத்தாமனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்தது குறித்து எனக்கோ, அவரது மனைவிக்கோ தெரிவிக்கவில்லை. இந்த உத்தரவு மற்றும் ஆவணங்கள் அஸ்வத்தாமனிடம் உரிய நேரத்தில் வழங்கவில்லை. பூந்தமல்லி கிளை சிறையில் அஸ்வத்தாமன் அடைக்கப்பட்டுள்ள நிலையில், புழல் சிறைக்கு இந்த உத்தரவை அனுப்பியது முறையற்றது.

அஸ்வத்தாமனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து அளித்த மனுவை அறிவுரைக்கழகம் நிராகரித்து விட்டது. எனது மகனின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறைலடைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக உள்துறை செயலாளர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

 

The post ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான அஸ்வத்தாமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து தாய் மனு: தமிழ்நாடு அரசு, சென்னை காவல் ஆணையர் பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: