இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற 2 சிறுமிகளும் மாலை வீடு திரும்பவில்லை. இவர்களின் பெற்றோர் அருகிலுள்ள உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தேடியுள்ளனர். எங்கும் கிடைக்காததால் இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 சிறுமிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post காஞ்சிபுரம் அருகே 2 சிறுமிகள் மாயம் appeared first on Dinakaran.