தாம்பரம் மாநகராட்சியில் ரூ.19.23 லட்சத்தில் திட்ட பணி: ஆணையர் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். முதலில் தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டலத்துக்கு உட்பட்ட 62வது வார்டு, முருகேசன் தெரு பகுதியில் ரூ.5.20 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து 63வது வார்டு, எம்இஎஸ் சாலை பகுதியில் ரூ.10.70 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர் கிழக்கு தாம்பரம், சேலையூர் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியினை ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் 64வது வார்டு, இரட்டை சாலை பகுதியில் ரூ.3.33 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 5 மெட்ரிக் டன் மின்னணு எடை மேடை கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post தாம்பரம் மாநகராட்சியில் ரூ.19.23 லட்சத்தில் திட்ட பணி: ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: