அதன்பேரில் திருத்தணி உதவி காவல் ஆய்வாளர் குணசேகரன் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது, படுக்கையறையில் இருந்த மின்விசிறியில் ஆனந்த்பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து சடலமாக தொங்கினார். அவர் 4 நாட்களுக்கு முன்மே இறந்ததால் சடலம் அழுகி துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது. சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஆனந்த்பாபுவின் சகோதரி திருமணமாகி கணவருடன் திருப்பதியில் வசித்து வருகிறார். ஆனந்த்பாபுவுக்கு திருமணமாகாத நிலையில், அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விற்க முடிவு செய்து, வீடு வாங்க வந்தவரிடம் முன் பணம் பெற்றுக் கொண்டதும், தனிமையில் அதிகளவில் மது அருந்தி மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
The post பெற்றோரை இழந்த விரக்தியில் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.