மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

திருத்தணி:புகையிலை இல்லா இளம் சமுதாயம் படைப்புது தொடர்பாக திருத்தணியில் பாரா மெடிக்கல் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் திருத்தணியில் நேற்று புகையிலை இல்லா இளம் சமுதாயம் படைப்போம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கமலா திரையரங்கம் அருகில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கலைவாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில், பாராமெடிக்கல் செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைகளில் பதாகைகள் ஏந்தி சித்தூர் மாநில நெடுஞ்சாலையில் பேரணியாகச் சென்று புகையிலை பொருட்களால் ஏற்படும் உடல் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக இளம் சமுதாயத்தினர் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இறுதியில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் பேரணி நிறைவு பெற்றது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முரளி, சுகாதார ஆய்வாளர்கள், தனியார் கல்லூரி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: