சித்தூர் சோகநாஷினி ஆற்றில் ஆனந்த குளியல் போட்ட வளர்ப்பு பெண் யானை

பாலக்காடு : சித்தூர் சோகநாஷினி ஆற்றில் தரைமட்ட பாலம் பகுதியில் திருவிழாவுக்கு சென்று திரும்பிய வளர்ப்பு பெண் யானை ஆனந்த குளியல் போட்ட காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா ஆழியாறு அணையின் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் பாலக்காடு மாவட்டம் சித்தூர் சோகநாஷினி ஆற்றில் தரைமட்ட பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்கின்றது. தண்ணீர் அதிகரித்துள்ள நிலையில் திருவிழாவிற்கு சென்று திரும்பிய வளர்ப்பு பெண் யானை, தண்ணீரை கண்டதும் ஆற்றில் இறங்கி ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சியடைந்தது.

இதனை சித்தூர்-வண்டித்தாவளம் சாலையில் செல்கின்ற பயணிகள் மற்றும் ஊர் மக்கள் கண்டு ரசித்தனர். ஆற்று நீரில் யானையை கிடத்தி யானைக்கு பாகன்கள் மசாஜ் செய்தனர். பின்னர் சோப்பு, ஷாம்பு ஆகியவை போட்டு குளிப்பாட்டினர்.

இதனை கிராம மக்கள் வேடிக்கை பார்த்து கண்டு மகிழ்ச்சியடைந்தனர். யானை பாகன்கள் சொன்னபடி அப்புறமும், இப்புறமுமாக திரும்பி படுத்தபடி உடலை பாகன்கள் குளிப்பாட்ட யானை வசதி செய்து கொடுத்தது. பின்னர் தண்ணீரை துதிக்கையால் உறிஞ்சி தூக்கி வீசி உடம்பு முழுவதும் தானாகவே தெளித்து குளிப்பாட்டி கொண்டது. இதனை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், மொபைலில் வீடியோ, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.

 

The post சித்தூர் சோகநாஷினி ஆற்றில் ஆனந்த குளியல் போட்ட வளர்ப்பு பெண் யானை appeared first on Dinakaran.

Related Stories: