இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி.மசிஹ் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில்,\\”இரு தரப்பினருக்கும் இடையே இருந்த அனைத்து வழக்குகளையும் ரத்து செய்கிறோம். அரசியலமைப்பின் 142வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு என்று உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, கடந்த அக்டோபர் 2018 முதல் பிரிந்து வாழும் தம்பதியரின் திருமணத்தையும் ரத்து செய்கிறோம். மேலும், ஐபிஎஸ் அதிகாரியான மனைவி, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஏற்படுத்திய உடல் மற்றும் மன வேதனைக்காக நிபந்தனையின்றி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அந்த மன்னிப்புக் கடிதத்தை பிரபலமான ஆங்கிலம் மற்றும் இந்தி நாளிதழின் தேசிய பதிப்பிலும், அதேப்போன்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களிலும் அந்த மன்னிப்பை வெளியிட வேண்டும்’ என்று தெரிவித்தது.
அதேநேரத்தில், இந்த மன்னிப்பை கணவர் தரப்பினர் மனைவிக்கு எதிராக எந்த ஒரு சட்ட நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தக் கூடாது. குழந்தையின் நலன் கருதி, குழந்தை தாயின் பராமரிப்பில் இருக்கும். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் குழந்தையைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும். ஒப்பந்தத்தின்படி மனைவி எந்த ஜீவனாம்சமும் பெறமாட்டார் என்று தீர்ப்பளித்தனர்.
The post குடும்ப வன்முறை தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.
