திருவனந்தபுரம் முதல் ஆலப்புழா வரை தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மக்கள் திரண்டிருந்ததால் இறுதி ஊர்வலத்தால் ஊர்ந்து தான் செல்ல முடிந்தது. இதனால் நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலம் 22 மணிநேரத்தை தாண்டி நேற்று மதியம் 1 மணியளவில் தான் ஆலப்புழாவை அடைந்தது. அங்கு கொட்டும் மழையில் ஏராமான பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், மயானத்தில அச்சுதானந்தனின் உடல் அங்குள்ள மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
The post முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தன் உடலுக்கு கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கானோர் இறுதி அஞ்சலி: சொந்த ஊரில் தகனம் appeared first on Dinakaran.
