புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கட்சி எம்பி ஜான் பிரிட்டாஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது தன்கரை விவசாயியின் மகன் என பிரதமர் மோடி உற்சாகமாக கொண்டாடியதற்கும், அவரது ராஜினாமாவுக்கு பிறகு தாமதமாக ரகசியமாக அறிக்கை வெளியிட்டதற்கும் உள்ள வேறுபாடு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. எனவே அரசியலமைப்பின் 2வது உயர்ந்த பதவியின் கண்ணியத்தை பாதுகாக்கவும், அதிகரித்து வரும் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தன்கரின் ராஜினாமாவை சுற்றியுள்ள கேள்விகளை ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இதை அரசு செய்யத் தவறினால், பதவியின் கண்ணியத்தை காக்க தன்கர் தன் மவுனத்தை கலைக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.
The post ராஜினாமா குறித்து தன்கர் மவுனத்தை கலைக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.