தஞ்சாவூர், நவ. 12: தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட கலெ க்டர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க் கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை பட்டா மாற்றம். கல்விக்கடன் உள்ளிட்டபல் வேறு கோரிக்கைகள் அடங்கிய 450 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், தனி த்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சங்கர், தாட்கோ மாவட்ட மேலாளர் ரெங்கராஜன் அவர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post தஞ்சையில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் 450 மனு வழங்கல் appeared first on Dinakaran.