புதுக்கோட்டை,நவ.22: புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகள் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் குடை பிடித்தும், ரெயின் கோட் அணிந்தும் சிலர் மழையில் நனைந்தபடியும் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே சாரல் முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று காலை முதல் விட்டு விட்டு புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கனமழை இல்லாததால் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டு வரக்கூடிய நிலையில் காலையில் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள் குடை பிடித்தும் ரெயின் கோட் அணிந்தும் சிலர் மழைகளில் நனைந்தபடியும் சென்றனர். மேலும் தொடர்ந்து சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் குளிர்ந்த காற்று வீசி குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது.
The post புதுக்கோட்டையில் தொடர் சாரல் மழை appeared first on Dinakaran.