வேலாயுதம்பாளையம் பகுதியில் சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் கண்டறியும் முகாம்

 

வேலாயுதம்பாளையம், நவ.22: வேலாயுதம்பாளையம் பகுதியில் சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குச்சாலை சுற்றுவட்டார பகுதியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று வீட்டில் உள்ள முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு காய்ச்சல் கண்டறியும் முகாமில் ஈடுபட்டனர். பொதுமக்களிடமிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு ரத்தத்தில் சர்க்கரை அளவு ,ரத்த அழுத்த அளவு குறித்த பரிசோதனையும் , அதேபோல் உடல் பரிசோதனையும் (ரத்த அழுத்தம்) செய்தனர். மேலும் பொதுமக்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சளி, உடல் வலி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குறித்து பரிசோதனைகள் செய்தனர். அவர்களுக்கு உரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் சளி மற்றும் காய்ச்சல் வராமல் இருப்பதற்கு பொதுமக்கள் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்தும், பொதுமக்கள் அதிகளவு கீரைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடம் தெரிவித்தனர். பொதுமக்கள் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பழ வகைகள்,காய்கறி வகைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

The post வேலாயுதம்பாளையம் பகுதியில் சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் கண்டறியும் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: