பாபநாசம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்ற தீர்மானம்

 

கும்பகோணம், நவ.22: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய மன்றக் கூடத்தில் ஒன்றிய குழுத்தலைவர் சுமதி கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் நந்தினி மற்றும் கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. கணபதி அக்ரஹாரம் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவது, ஆதனூர் ஊராட்சி மருத்துவக்குடியிலிருந்து ஓலைப்பாடி வழியாக திருப்புறம்பியம் செல்லும் சாலை பாபநாசம் ஒன்றியத்திற்குட்பட்ட 3,600 கிலோ மீட்டர் சாலை பேருந்து போக்குவரத்திற்கான நெடுஞ்சாலைத்துறைக்கு எடுத்து கொள்ள மாவட்ட ஆட்சியர் மூலமாக முன்மொழிவு அனுப்பி வைத்திடுவது உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களும், ஒன்றிய பொறியாளர்களும், ஊரக வளர்ச்சி பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

The post பாபநாசம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்ற தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: