மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் கல்லூரி மாணவிகளுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்

 

திருச்சி, நவ.22: திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் நேற்று நடந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் ஹோலிகிராஸ் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற்றனர். திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான கிருஸ்டோபர் தலைமை வகித்து, சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் மற்றும் சட்டங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.

நிரந்தர மக்கள் கோர்ட்டின் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதியுமான, நீதிபதி ஜெயசிங் முகாமுக்கு முன்னிலை வகித்து, நிரந்தர மக்கள் கோர்ட்டின் செயல்பாடுகள் மற்றும் நிரந்தர மக்கள் ேகார்ட்டில் கையாளப்படும் வழக்குகளின் தன்மைகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதியுமான சிவக்குமார் சிறார் நீதிச்சட்டம் குறித்து விளக்கினார். முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு சட்டம் குறித்தும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு பெற்றனர்.

The post மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் கல்லூரி மாணவிகளுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: