தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

 

தஞ்சாவூர், நவ. 22: தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாநகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியானது பழைய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட போது கட்டப்பட்டது. பொதுமக்கள் அந்த குடிநீரை குடிக்க பயன்படுத்துவார்கள். கால போக்கில் அந்த குடிநீர் தொட்டியானது பழுதடைந்து மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது. தஞ்சை பழைய பேருந்திற்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட பேருந்துக்கள் சென்று வருகிறது. அம்மாப்பேட்டை, மாரியம்மன் கோவில், மருத்துவகல்லூரி, வல்லம், நீடாமங்கலம், அரியலூர், பெரம்பலூர், கும்பகோணம், திருக்காட்டுப்பள்ள, பூதலூர், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து வசதிகள் இருந்து வருகிறது. தினமும் 5000க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் சென்று வருகின்றனர். தஞ்சை பழைய பேருந்து நிலையம் எப்போதும் பொதுமக்களால் நிறைந்து இருக்கும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் குடிநீர் தொட்டி இருந்தும் பயன் இல்லாமல் உள்ளது. எனவே மாநகராட்சி சார்பில் அந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: