×

குட்கா பதுக்கிய 4 கடைகளுக்கு சீல்

ராசிபுரம், நவ.12: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான போதை வாஸ்துகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதன்பேரில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் முருகன் மற்றும் ராசிபுரம் போலீசார், புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் விஜயலட்சுமி திரையரங்கம் அருகே உள்ள பெட்டிக்கடைகள், சிவானந்தா சாலை பகுதியில் உள்ள மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இதில், தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும், 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

The post குட்கா பதுக்கிய 4 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Gutka ,Rasipuram ,Namakkal district ,Food ,Safety ,Department ,Officer ,Murugan… ,
× RELATED ராசிபுரம் அருகே மளிகை கடையில் குட்கா...