பரமத்திவேலூர், ஜன.3: பரமத்திவேலூரை அடுத்த பாண்டமங்கலம் வெங்கரை காவிரி ஆற்றில் உள்ள மயான பகுதியில், சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக, பரமத்திவேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் எஸ்ஐ சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது மயானம் அருகே, சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்களை சுற்றி வளைத்த போது, ஒருவர் மட்டும் அங்கிருந்து தப்பி சென்றார். பிடிபட்ட 4பேரிடம் நடத்திய விசாரணையில், வெங்கரை பகுதியை சேர்ந்த பெரியசாமி, சத்யராஜ், வீராச்சாமி, பரமத்திவேலூரை சேர்ந்த கருப்பையா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 4பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post பரமத்திவேலூரில் சூதாடிய 4 பேர் கைது appeared first on Dinakaran.