- ஜனநாயக மக்கள்
- லீக்
- நாமக்கல்
- நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம்
- ஜனநாயக மக்கள் கழகம்
- உழைக்கும் மக்கள் கட்சி
- காவிரி ஆறு…
- தின மலர்
நாமக்கல், டிச.31: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், ஜனநாயக மக்கள் கழகம் மற்றும் உழைப்பாளி மக்கள் கட்சி சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும். சாயப்பட்டறை கழிவுநீரை காவிரி ஆற்றில் கலக்காமல் தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக மக்கள் கழக மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். தொழிற் சங்க தலைவர் சக்திவேல், உழைப்பாளி மக்கள் கட்சியின் மாநில செயலாளர் முருகேசன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
The post ஜனநாயக மக்கள் கழகம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.