×

சாலையில் தேங்கிய குப்பை கழிவுகள் அகற்றம்

நாமக்கல், ஜன.1:நாமக்கல் திருச்சி ரோடு வகுரம்பட்டி ஊராட்சி பொன்விழா நகரில் இருந்து துறையூர் ரோடு செல்லும் சாலையில் குப்பை கழிவுகள் மலைபோல குவிந்து கிடந்தது. இந்த இடம் வகுரம்பட்டி ஊராட்சியின் கடைசி எல்லையாகும். இங்கிருந்து 100 மீட்டர் தொலைவில், நாமக்கல் மாநகராட்சி பகுதியான அன்னை சத்யா நகர் அமைந்துள்ளது. அதன் அருகாமையிலேயே மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. ஆனால், எல்லை பிரச்னையில், இந்த குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் எடுப்பதில்லை. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சாலையோரம் தொடர்ந்து குப்பைகளை வீசி வந்தால், அங்கு மலைபோல குப்பை கழிவுகள் குவிந்து கிடந்தன. இதனால் அங்கு சுகாதார சீர் கேடு ஏற்பட்டது.

இது குறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதன்தொடர்ச்சியாக, குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாரகன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜாரகுமானை அறிவுறுத்தினர். இதைதொடர்ந்து அந்த பகுதியில் பல நாட்களாக குவிந்து கிடந்த குப்பைகழிவுகளை, வகுரம்பட்டி ஊராட்சி பணியாளர்கள் டிராக்டர் கொண்டு வந்து அள்ளி சென்றனர். மேலும் அந்த இடத்தில் யாரும் குப்பைகொட்டகூடாது என விழிப்புணர்வு பலகை வைக்கவும் ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

The post சாலையில் தேங்கிய குப்பை கழிவுகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Ponvizhha Nagar ,Vakurampatti Panchayat ,Trichy Road ,Namakkal Corporation… ,Dinakaran ,
× RELATED காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கொலை?