×

திருச்செங்கோட்டில் சாலை பணிகளை பொறியாளர் ஆய்வு

திருச்செங்கோடு, டிச.31: நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு உட்கோட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும், ஓமலூர்- சங்ககிரி- திருச்செங்கோடு- பரமத்தி சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி நடந்து வருகிறது. முடிவுற்ற பணிகளை, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கலவையின் தடிமன், அடர்த்தி, உறுதித்தன்மை மற்றும் மேல்தள சாய்வு ஆகியவற்றை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, நாமக்கல் கோட்டப்பொறியாளர் திருகுணா, உதவி கோட்ட பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர்கள் மோகன்ராஜ், பிரதீப் ஆகியோர் உடனிருந்தனர்.

The post திருச்செங்கோட்டில் சாலை பணிகளை பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thiruchengode ,Construction and Maintenance Division ,Namakkal Highways Department ,Omalur-Sangagiri- ,Tiruchengode-Paramathi road ,Tamil Nadu ,
× RELATED மணலி ஜேடர்பாளையத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை கலெக்டர் ஆய்வு