கட்சிப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தல், கூட்டணி வியூகம் குறித்து மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. விஜய் கட்சி தொடர்பாகவும் மாவட்டச் செயலாளர்களிடம் இபிஎஸ் ஆலோசிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1½ ஆண்டுகளே இருப்பதால், அதுவரை மக்கள் பிரச்சினைகளை வெளியே கொண்டுவந்து போராட்டங்களை நடத்துவது குறித்து விவாதிக்கப்படுவதாகவும் அதிமுக பொதுக்குழுவுக்கு முன்னதாகவே உட்கட்சித்தேர்தலை நடத்த தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.கிளைச்செயலாளர் முதல் பொதுச்செயலாளர் வரை விரைவில் உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர் செல்வம் ஒன்றாக இருந்தபோது அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
The post அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.