போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு காலதாமதமின்றி ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் ஊதிய ஒப்பந்தத்தில் 3 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டதை 4 ஆண்டுகள் என அரசு தன்னிச்சையாக மாற்றியதை தொழிலாளர்கள் ஏற்கவில்லை. 4 ஆண்டுகளாக மாற்றியமைத்தும் 2023ம் ஆண்டு செப்.1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டிய 15 வது ஊதிய உயர்வுக்கான ஒப்பந்த பேச்சுவார்த்தை 16 மாதங்கள் கடந்தும் முடிவுறாத நிலைதான் உள்ளது. இது தொழிலாளர் நல விரோத போக்காகும்.

இந்நிலையில் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை எவ்வித பயன் தரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் தொழிலாளர்கள். எனவே தொழிலாளர்கள் நலன், வருங்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும். எனவே 2023ம் ஆண்டு செப்.1ம் தேதிமுதல் நடைமுறைப்படுத்த வேண்டிய ஊதிய ஒப்பந்தத்தை எவ்வித பாகுபாடின்றியும், இந்த வார இறுதிக்குள்ளாகவே பேசி முடித்து நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

The post போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு காலதாமதமின்றி ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: