குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் கட்டாய தேர்ச்சி முறை ரத்து அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

நாகர்கோவில்: பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து என்ற அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று அன்புமணி கூறி உள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று நாகர்கோவிலில் அளித்த பேட்டி: ஒன்றிய அரசின் 5, 8ம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்திருப்பது, கல்வி இடைநிற்றலை அதிகரிக்கும். ஒன்றிய அரசின் பள்ளிகள் மட்டும் என இதில் கூற முடியாது. ஒன்றிய அரசின் பள்ளிகளிலும் 25 சதவீதம் ஏழை மாணவர்கள் பயில்கிறார்கள். இவர்கள் 5 ம் வகுப்பிலோ, 8ம் வகுப்பிலோ தோல்வி அடைந்தால், உடனடியாக படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்று விடுவார்கள்.

இதனால் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே கட்டாய தேர்ச்சி முறை ரத்து என்ற முடிவை ஒன்றிய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். பா.ஜ.வுடன் கூட்டணியில் இருந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியவற்றுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அம்பேத்கர் நம் தேசத்தின் தலைவர். அம்பேத்கரை இழிவுப்படுத்தும் வகையில் யார் பேசினாலும், தவறு ஆகும். பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடியையும், எம்.ஜி.ஆரையும் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். எங்களை பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., எம்ஜிஆர் தான். மோடி, மோடி தான். இவ்வாறு அவர் கூறினார்.

The post குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் கட்டாய தேர்ச்சி முறை ரத்து அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: