புதுடெல்லி:‘சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை ஒன்றிய அரசு வேண்டுமென்றே சீரழித்து வருகிறது’ என, காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து வருவதாக, ஒன்றிய அரசு பொய்யாக புள்ளி விவரங்களை வெளியிட்டு வருவதாகவும், அதேசமயம் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க தவறி விட்டதாகவும், பத்திரிகை கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, நாட்டின் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அதிகரிக்கவில்லை.
சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை, ஒன்றிய அரசு வேண்டுமென்றே சீரழித்து வருகிறது. தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு திட்டங்கள் தீட்டாமல் அலட்சிய போக்கை, ஒன்றிய அரசு கடைபிடித்து வருகிறது. கோவிட் நோய் பரவலாக இருந்தபோது, நாடெங்கும் சரியாக திட்டமிடாமல் லாக்டவுன்கள் அமல்படுத்தப்பட்டதால், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒன்றிய அரசின் மோசமான கொள்கையால், தொழிலாளர்களின் வருவாய் குறைந்துள்ளது. உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான, ஆபத்தான நிலையில் சிக்கித் தவிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post சிறு, குறு, நடுத்தர தொழிலை சீரழித்து வரும் ஒன்றிய அரசு: வேண்டுமென்றே செய்வதாக காங். குற்றச்சாட்டு appeared first on Dinakaran.