ஊட்டி, அக்.29: ஒரசோலை அரசு நடுநிலைப்பள்ளியில் மேலாண்மை குழு முதல் கூட்டம் நடந்தது. பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக்கு பிறகு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் உண்டு உறைவிட பள்ளிகள் முதலான அனைத்து வகை பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, முதல் கூட்டம் கோத்தகிரி வட்டம் ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவி நிஷாந்தி தலைமையில் நடைபெற்றது. கவுன்சிலர்கள் சகுந்தலா, தேவகி பெரியசாமி, முன்னாள் மாணவர் உறுப்பினர் ராணுவ வீரர் ராஜகோபால், லால்ஜி சிவா, ஆண்டிகவுடர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பள்ளி கட்டமைப்பு, கற்றல் திறன் மேம்பாடு, வாசிப்பு இயக்கம், ஆங்கில பயிற்சி, மாணவர் சேர்க்கை, இடைநிற்றல், போக்சோ , போதை பழக்க விழிப்புணர்வு, கலைத்திருவிழா, மாணவர்களை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்தல் மற்றும் வன விலங்குகள் அடிக்கடி பள்ளிக்கு வருவது குறித்தும் அது சார்ந்த மண்டி கிடக்கும் புதர்களை அகற்ற பேரூராட்சிக்கு நினைவூட்டல், மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் விவாதித்து தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இதில் 16 உறுப்பினர்கள் பங்கேற்றனர். முன்னதாக, அனைவரையும் வரவேற்ற ஒரசோலை பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன், மேலாண்மை குழு தலைவிக்கு நினைவு பரிசு வழங்கி கூட்டத்தை ஒருங்கிணைத்தார். முடிவில் ஆசிரியை கமலா நன்றி கூறினார்.
The post ஒரசோலை அரசு பள்ளியில் மேலாண்மை குழு முதல் கூட்டம் appeared first on Dinakaran.