இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு

 

ஊட்டி, டிச.20: தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லெனின் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உடலுைழப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டது. இதுபோல 19 தொழிலாளர் நல வாரியங்கள் செயல்படுகிறது.

இதில் வெளி மாநில கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் இணையம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை (ஜிஐஜி – ஸ்விகி, சோமட்டோ, பிளிப்கார்ட் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள்) அதிக அளவில் பதிவு செய்யும் பொருட்டு தோழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் பிரதிவாரம் புதன்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை முகாம் நடைபெறும்.

புதன்கிழமை அரசு விடுமுறையாக இருக்கும் பட்சத்தில் அதற்கு அடுத்த அரசு வேலை நாட்களில் முகாம் நடைபெறும். மேற்குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் தக்க ஆவணங்களுடன் (வயதிற்கான ஆவணம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி புத்தகம், புகைப்படம், நியமனதாருக்கான ஏதேனும் ஒரு அடையாள ஆவணம் ஆகிய அசல் ஆவணங்களுடன்) ஊட்டி ஸ்டேட் பேங்க் லேன் பகுதியில் செயல்படும் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: