மஞ்சூர், டிச.24: மஞ்சூர் அருகே தணயகண்டி கிராமத்தில் குறை கேட்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கிண்ணக்கொரை தணயகண்டி பழங்்குடியினர் கிராமத்தில் அனைத்து துறை சார்பில் பொதுமக்கள் குறைகேட்பு மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊட்டி ரூரல் டி.எஸ்.பி. நமச்சிவாயம் தலைமை தாங்கினார். குந்தா தாசில்தார் சுமதி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பழங்குடி மக்களின் குறைகள் கேட்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டது. பெரும்பாலும் பட்டா, குடும்பஅட்டை, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்ககோரி பொது மக்கள் மனு அளித்தனர். இதில் மஞ்சூர் எஸ்.ஐ.சௌந்திரராஜன், தனிப்பிரிவு எஸ்.ஐ.அப்பாஸ், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்வர்மா மற்றும் உள்ளாட்சி, வனத்துறை, மின்வாரியம், சுகாதாரம், குடிநீர் வடிகால் வாரியம் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post மஞ்சூர் அருகே தணயகண்டி கிராமத்தில் குறை கேட்பு சிறப்பு முகாம் appeared first on Dinakaran.