கூடலூரில் 27ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

 

ஊட்டி, டிச.24: நீலகிரி மாவட்டம் கூடலூாில் மைசூர் சாலை, பழைய இந்தியன் வங்கி கட்டிடத்தில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 27ம் தேதி காலை 11 மணி முதல் மதிம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நீலகிரி மின்பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை வகிக்கிறார்.

அப்போது கீழ் கூடலூர், கூடலூர் நகரம், கூடலூர் நகரம் தெற்கு, தேவர்சோலை, மசினகுடி, பந்தலூர், சேரம்பாடி, அய்யன்கொல்லி மற்றும் உப்பட்டி அலுவலகத்தை சார்ந்த மின் நுகர்வோர்கள் தங்கள் மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகளை மேற்பார்வை பொறியாளரிடம் நேரில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

The post கூடலூரில் 27ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: