உடைந்து சேதம் அடைந்து வரும் இரும்பு தடுப்புகள்

 

கூடலூர், டிச.20: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நகர் பகுதியில் சாலையின் இரு புறமும் உள்ள நடைபாதைகளில் நகராட்சி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக துருப்பிடிக்காத இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இந்த தடுப்புகளில் பழைய பேருந்து நிலையம் சிக்னல் துவங்கி சுங்கம் ரவுண்டனா வழியாக புதிய பேருந்து நிலைய பகுதி வரை வியாபாரிகள் சங்கம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் மலர் தொட்டிகள் வைத்து அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

சிக்னல் பகுதியில் இருந்து ஊட்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் பல இடங்களில் உடைந்து சேதம் அடைந்து உள்ளன. இந்த சாலையில் கனரா வங்கி அமைந்துள்ள பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் சிக்கல் வரை அமைக்கப்பட்ட தடுப்புகளில் ஊட்டியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அடிக்கடி மோதி சேதமடைந்து வருகின்றன.

இதேபோல் எதிர் புறத்திலும் தடுப்புகள் சேதம் அடைந்து காணப்படுகின்றன. பணிகளில் தரமற்ற தன்மை காரணமாக அவை சேதம் அடைந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சேதம் அடைந்துள்ள தடுப்புகளை தரமான முறையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உடைந்து சேதம் அடைந்து வரும் இரும்பு தடுப்புகள் appeared first on Dinakaran.

Related Stories: