புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் வருகிற 13ம் தேதி காலியாக உள்ள 9 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சமாஜ்வாடி 7 தொகுதியிலும், காங்கிரஸ் 2 தொகுதியிலும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்ய காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் நிபந்தனையின்றி பாடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post உ.பி. இடைத்தேர்தலில் காங். போட்டி இல்லை: சமாஜ்வாடி வேட்பாளர்களுக்கு ஆதரவு appeared first on Dinakaran.