கர்நாடகாவில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் குமாரசாமி மகன் போட்டி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் சந்தூர், சென்னபட்டனா, ஷிகான் ஆகியோ சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் சென்னபட்டனா தொகுதி துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ஒன்றிய அமைச்சர் குமாரசாமி ஆகியோருக்கு சொந்தமானது.

பாஜ மேலவை உறுப்பினராக இருந்த சி.பி.யோகேஸ்வர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். அவரையே சென்னபட்டனா தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒன்றிய அமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி களமிறக்கப்பட்டுள்ளார். இவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

The post கர்நாடகாவில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் குமாரசாமி மகன் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: