டிசம்பர் மாதத்திற்குள் திறக்க திட்டம் இதுவரை 20,000 பள்ளிகளில் இணையதள வசதி

தமிழ்நாட்டிலுள்ள 6,223 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இதுவரை 5,913 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 6,992 நடுநிலைப்பள்ளிகளில் 3,799 பள்ளிகளில் இவ்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தமட்டில் மொத்தமுள்ள 24,338 பள்ளிகளில் 10,620 பள்ளிகளில் இணையதளவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இப்பள்ளிகளுக்கு அதிவேக இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இப்பணியானது முடிக்கப்பட்டு, மீதமுள்ள 17,221 அரசுப் பள்ளிகளுக்கும் பணிநடைபெற்று வருகிறது. வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபவங்களோடு உத்வேகமான மனநிலையோடு கல்வி கற்பார்கள்.

The post டிசம்பர் மாதத்திற்குள் திறக்க திட்டம் இதுவரை 20,000 பள்ளிகளில் இணையதள வசதி appeared first on Dinakaran.

Related Stories: