போக்சோ வழக்கில் கைதான தொழிலாளி குண்டாசில் சிறையில் அடைப்பு

 

ஈரோடு, அக். 23: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ வழக்கில் கைதான தொழிலாளி, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சத்தியமங்கலம் மலையடி புதூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் வடிவேல் (44). தொழிலாளி. சத்தியமங்கலத்தை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ வழக்கு பதிந்து, வடிவேலை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து வடிவேலை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஈரோடு எஸ்பி ஜவகர், கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.

இந்த பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, போக்சோ வழக்கில் கைதான வடிவேலை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஏற்கனவே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடிவேல், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை, சத்தி அனைத்து மகளிர் போலீசார் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

The post போக்சோ வழக்கில் கைதான தொழிலாளி குண்டாசில் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: