துருக்கி விமான தொழிற்சாலையில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்: 5 பேர் பலி

அங்காரா: துருக்கி விமான தொழிற்சாலையில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 தீவிரவாதிகள் உள்பட 5 பேர் பலியானார்கள். துருக்கியில் அங்காராவில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள கஹ்ராமன்காசான் பகுதியில் மிகப்பெரிய விமான தொழிற்சாலை அமைந்துள்ளது. 50 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ள இங்கு 16 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுாிந்து வந்தனர். அங்கு நேற்று ஒரு பெண் உள்பட 2 தீவிரவாதிகள் புகுந்து பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். அந்த பெண் மனித வெடிகுண்டாக மாறி வெடித்து சிதறினார். உடன் வந்தவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். பெண் தீவிரவாதி வெடித்து சிதறியதால் விமான தொழிற்சாலை பலத்த சேதம் அடைந்தது. தீப்பற்றி எரிந்தது. மிகப்பெரிய புகை மண்டலம் எழுந்தது.

இந்த திடீர் தாக்குதலில் ஈடுபட்ட 2 தீவிரவாதிகளும் பலியானார்கள். மேலும் 3 தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். மொத்தம் 14 பேர் படுகாயம் அடைந்தனர். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக ரஷ்ய நகரமான கசானுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் சென்றிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இஸ்தான்புல் நகரில் தற்போது பாதுகாப்பு மற்றும் விண்வெளித் தொழில்களுக்கான ஒரு பெரிய வர்த்தக கண்காட்சி நடக்கிறது. இந்த நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலால் துருக்கியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

The post துருக்கி விமான தொழிற்சாலையில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்: 5 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: