துணை கலெக்டர் தற்கொலை: பஞ். தலைவி திவ்யா ராஜினாமா


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் துணை கலெக்டர் நவீன் பாபு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி திவ்யா டிஸ்மிஸ் செய்யப்பட்டார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட துணை கலெக்டராக இருந்தவர் நவீன் பாபு (55). சில தினங்களுக்கு முன்பு அவரது சொந்த ஊரான பத்தனம்திட்டாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதையொட்டி கண்ணூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வழியனுப்பு விழாவில் அழைப்பு இல்லாமல் பங்கேற்ற கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவி திவ்யா, துணை கலெக்டர் நவீன் பாபு ஊழல்வாதி என்று பேசினார்.

இதனால் மனவேதனை அடைந்த துணை கலெக்டர் நவீன் பாபு அவர் தங்கியிருந்த குடியிருப்பில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் திவ்யா மீது தற்கொலைக்கு தூண்டியதாக கண்ணூர் டவுன் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரை பஞ்சாயத்து தலைவர் பதவியிலிருந்து நீக்க கண்ணூர் மாவட்ட சிபிஎம் தீர்மானித்தது. இதையடுத்து திவ்யா பஞ்சாயத்து தலைவர் பதவியை நேற்று இரவு ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

The post துணை கலெக்டர் தற்கொலை: பஞ். தலைவி திவ்யா ராஜினாமா appeared first on Dinakaran.

Related Stories: