சங்கம் வைக்கும் உரிமை கோரி சிஐடியு சாலைமறியல் போராட்டம்

 

விருதுநகர், அக்.2: விருதுநகரில் சாலைமறியலில் ஈடுபட்ட சிஐடியு சங்கத்தை சேர்ந்த 134 பேர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சங்கம் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சங்கம் வைக்கும் உரிமை கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை கண்டித்தும், சங்கம் வைக்கும் உரிமை வழங்க கோரியும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். சிஐடியு தொழிற்சங்க மாவட்ட தலைவர் மகாலட்சுமி தலைமையில் மாவட்ட செயலாளர் தேவா மறியலை துவக்கி வைத்தார். மறியல் செய்த 12 பெண்கள் உட்பட 134 பேரை மேற்கு போலீசார் கைது செய்தனர். நிர்வாகிகள் அசோகன், வேலுச்சாமி, பாலசுப்பிரமணியன், பாண்டியன், கார்மேகம், வெள்ளைத்துரை உள்பட பலர் பங்கேற்றனர்.

The post சங்கம் வைக்கும் உரிமை கோரி சிஐடியு சாலைமறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: