பரமக்குடி,ஜன.12: பரமக்குடி அருகே உள்ள உலகநாதபுரம் அற்புத குழந்தை இயேசு கோயிலில் மின்னொளி தேர் பவனி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பரமக்குடி அருகே உலகநாதபுரத்தில் அமைந்துள்ள அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் 10ம் ஆண்டு பங்குத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக, கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழா 9ம் நாளான நேற்று மின்சார திருத்தேர் பவனி நடைபெற்றது.
குழந்தை இயேசுவின் உருவம் தாங்கிய திருத்தேர் பவனியின் முன்னே இறைமக்கள் செல்ல தேர்பவனி கோயிலை சுற்றி வலம் வந்தது. இன்று நடந்த தேர் பவனி விழாவை முன்னிட்டு குழந்தை இயேசு கோயில் அருள் பணி இருதயராஜ், சேசு தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்ப பணியாளர் சுவக்கின் ஞானதாசன் மற்றும் பங்கு நிர்வாகிகள் சிறப்பாக செய்தனர்.
