வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

ராஜபாளையம், ஜன.12: ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராஜபாளையம் ராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் இம்மானுவேல் (63). ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை ஊழியர். இவர், மதுரை விமான நிலையத்திற்கு வெளிநாட்டிலிருந்து மகன் வருவதால், அவரை அழைக்க குடும்பத்தினரோடு சென்றார்.

பின்னர் மதுரையிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த சுமார் 9 சவரன் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, நகை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

 

Related Stories: