தேவாரம் அருகே சித்த மருத்துவ முகாம்

தேவாரம், ஜன. 12: தேவாரம் அருகே எரணம்பட்டி மஸ்ஜிதுல் இலாஹி பள்ளிவாசலில் சித்த மருத்துவ முகாம் நடந்தது. இந்த சித்த மருத்துவ முகாமில், சர்க்கரை நோய் மருந்துகளான மதுமேக கேப்சூல்கள், மதுமேக சூரணம், இரத்த சோகை நீக்கும்,பெரோசித் கேப்சூல்கள், பெரோசித் டானிக்குகள், உடல்வலி போக்கும் குக்கில் மாத்திரை, மூட்டுவலிக்கான சிலாசத்து மாத்திரைகள், பிண்ட தைலம், வாத கேசரி தைலம், சளி இருமல் தீர்க்கும் சுவாச குடோரி மாத்திரை, போன்றவை வழங்கப்பட்டது.

இம்முகாமில் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் சிராஜூதீன், டாக்டர் வைஷ்ணவி கிராம சுகாதார செவிலியர் சாந்தி கூத்தப்பெருமாள், சுகாதார தன்னார்வலர்கள் பிரபா முருகன், சுமதி உதயகுமார், தாஹிரா ஆஷிகா கலீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இம்முகாமினை மஸ்ஜிதுல் ஈமான் பள்ளிவாசல் தலைவர் அபுபக்கர், நிர்வாகிகள் அப்துல் வாஹித், அப்துல் ரஹ்மான் ஆகியோர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: