கூடங்குளம்,செப்.27: திமுக பவள விழாவை முன்னிட்டு ராதாபுரம் ஒன்றியம், பெட்டைக்குளம் ஊராட்சி பகுதியில் செயல்படும் யூனியன் துவக்க பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு கிழக்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி அமைப்பாளர் நெல்லை ஏ.ஆர்.ரகுமான் தனது சொந்த செலவில் சீருடைகள் வழங்கினார். நிகழ்வில் ராதாபுரம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் தனபால், சிறுபான்மை அணி மாவட்டத் தலைவர் அப்துல் காதர், முன்னாள் கவுன்சிலர் பக்கீர், திமுக பிரமுகர் பிரகாசம், தாஜுதீன், தலைமை ஆசிரியர் லதா, செல்சன், தகவல் தொழில்நுட்ப அணி ராதாபுரம் மேற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அன்றோ சந்தியாகு அக்ஸில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post ராதாபுரம் அருகே துவக்க பள்ளி மாணவர்களுக்கு சீருடை நெல்லை ஏ.ஆர்.ரகுமான் வழங்கினார் appeared first on Dinakaran.